விஜய் சேதுபதி குரலில் பிரபுதேவாவின் வுல்ஃப் பட பாடல் ரிலீஸ்!

வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (09:20 IST)
கோலிவிட்டில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமன இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். ஆனால், அவரது சமீபத்தில் படங்கள் வெற்றிபெறவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அவர் மீண்டும் நடிப்பு பாதைக்குத் திரும்பியுள்ளார். ஆனால் நடிப்பும் அவருக்கு பெரியளவில் கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் இப்போது அவரின் 60 ஆவது படமாக வுல்ஃப் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை வினோ வெங்கடேஷ் இயக்குகிறார். படத்தில் பிரபுதேவாவோடு வசிஷ்டா என் சிம்ஹா, ராய் லட்சுமி, அஞ்சு குரியன், அனசுயா பரத்வாஜ், ஸ்ரீ கோபிகா, ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது.  பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் ஹிப்னாடிக் திரில்லர் படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை விஜய் சேதுபதி பாடியுள்ளார். சிங்கிள் மால்ட்டோ என்ற அந்த பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி கவனத்தை குவித்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்