லியோ படம் பற்றிய மீமைப் பகிர்ந்த நடிகர் ஹரிஷ் உத்தமன்… செம்ம மாஸா இருக்கே!

வியாழன், 15 ஜூன் 2023 (10:58 IST)
விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. மாஸ்டர் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மேல் எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் இது லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஏற்கனவே கைதி மற்றும் விக்ரம் படங்களில் நடித்த நடிகர்கள் சிலர் லியோவிலும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் கைதி படத்தில் தாஸ் என்ற வில்லன் வேடத்தில் நடித்திருந்த ஹரிஷ் உத்தமன் லியோ படம் குறித்த ஒரு மீம்ஸை பகிர்ந்து, இது நடக்க ஆசையாக உள்ளது எனக் கூறியுள்ளார். அந்த மீமில் விஜய்யோடு போனில் பேசும் ஹரிஷ் “லியோ நீ ஆபத்துல இருக்க… ‘ என சொல்ல, அதற்கு விஜய் “நா ஆபத்துல இல்ல… ஆபத்தே நான்தான்” என சொல்வது போல உள்ளது. இந்த மீம் இப்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்