பிராஜக்ட் கே படத்தில் கமல்ஹாசன் இணைவது எப்போது? வெளியான தகவல்!

சனி, 17 ஜூன் 2023 (15:40 IST)
கமல்ஹாசன் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க 20 நாட்களுக்கு கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

கமல்ஹாசன் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லனாக நடிப்பதில்லை. எதிர்கதாநாயகனாக இந்தியன், ஆளவந்தான் உள்ளிட்ட சில படங்களில் தோன்றி இருந்தாலும், அந்த படங்களில் கதாநாயகனாகவும் அவரே நடித்திருந்தார். 2.0 படத்தில் கூட வில்லனாக நடிக்க வந்த அழைப்பை ஏற்க மறுத்தார்.

இந்நிலையில் இப்போது வில்லனாக நடிக்க சம்மதித்து இருப்பது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்து விட்ட பிராஜக்ட் கே படத்தில் கமல்ஹாசன் ஆகஸ்ட் மாதத்தில் இணையவுள்ளார் என சொல்லப்படுகிறது. அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் தொடர்ச்சியாக 20 நாட்களில் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்