‘அயன்’, ‘மாற்றான்’ படங்களைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பெரும்பான்மையான ஷூட்டிங் டெல்லியில் நடைபெற இருக்கிறது. காரணம், கதைக்களம் அங்குதான். அதுமட்டுமல்ல, பிரேசில், நியூயார்க், ஹைதராபாத் என மொத்தம் 10 இடங்களில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்து வருகிறார். ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் சூர்யா ஜோடியாக நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்தபிறகே கே.வி.ஆனந்த் படத்தின் ஷூட்டிங் தேதி முடிவு செய்யப்படும்.