கீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’ ஷூட்டிங் ஓவர்

வெள்ளி, 23 மார்ச் 2018 (15:14 IST)
கீர்த்தி சுரேஷ் நடித்துவந்த ‘நடிகையர் திலகம்’ படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
‘நடிகையர் திலகம்’ என்று போற்றப்படும் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்து வருகிறார் நாக் அஸ்வின். தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் இந்தப் படம் உருவாகி வருகிறது.
 
சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, அவருடைய கணவரும், நடிகருமான ஜெமினி கணேஷ் வேடத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். பத்திரிகையாளர் வேடத்தில் சமந்தா நடிக்க, முக்கிய வேடங்களில் நாக சைதன்யா, ‘அர்ஜுன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோரும் நடிக்கின்றனர்.
 
இந்தப் படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்தத் தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். மே மாதம் 9ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்