கடைசி விவசாயில் ரிலிஸ் குறித்த அறிவிப்பு? குழப்பங்களுக்கு பதில்!

திங்கள், 15 நவம்பர் 2021 (10:04 IST)
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி திரைப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகியப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மணிகண்டன் தனது நான்காவதாகப் படமாகக் கடைசி விவசாயி எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்தப்படத்தில் 70 வயது விவசாயி ஒருவர் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் முழுவதுமாக தயாராகி விட்டாலும் சில ஆண்டுகளாக ரிலீஸாகாமல் கிடப்பில் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா லாக்டவுனும் சேர்ந்துகொண்டதால் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய இயக்குனரும் தயாரிப்பாளருமான மணிகண்டன் முடிவு செய்துள்ளாராம். சோனி லிவ் தளத்தில் ரிலீஸாவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.

ஆனால் அந்த முடிவில் இருந்து ஒரு கட்டத்தில் பின் வாங்கினார் இயக்குனரும் தயாரிப்பாளருமான மணிகண்டன். இந்நிலையில் கிடப்பில் கிடந்த கடைசி விவசாயி படம் இப்போது திரையரங்குகளை விரைவில் சந்திக்க உள்ளது. வரும் டிசம்பர் மாதம் திரையரங்க வெளியீடாக கடைசி விவசாயி வெளியாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்