விஜய்சேதுபதி வெளியிட்ட முகம் டிரெய்லர்

வியாழன், 18 அக்டோபர் 2018 (16:01 IST)
நடிகர் கலையரசன், அருந்ததி நடிப்பில் உருவாகியுள்ள முகம் பட டிரெய்லரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
 
ஸ்ரீகிருஷ்ணா மீடியா  தயாரிப்பில், ஸ்ரீராம் டி பிரசாத் இயக்கத்தில்  கலையரசன், அருந்ததி, ஜெகன், ஆர்கே சுரேஷ். மைமி கோபி மற்றும் மனோசித்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் முகம்.  அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டுள்ளார்.
 
ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் கலையரசனின் அனைத்து தகவல்களையும் மொபைல் மூலமாக ஒரு மர்ம நபர் கண்டுபிடிக்கிறார். அவர் கலையரசனிடம் ஆர்கே சுரஷ்சை சில நாட்களுக்குள் கொல்ல வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கிறார். இல்லாவிட்டால் உன்னை பற்றிய தகவல்களை வெளியே விட்டுவிடுவேன் என கலையரசனை மிரட்டுகிறார். 
 
இதில் எப்படி தப்பி வருகிறார் என்பதே கதையாக டிரெய்லரில் காட்டப்படுகிறது. இதில் ஹீரோ கலையரசன் இந்த படத்துக்கு கடுமையாக உழைத்திருப்பது டிரெய்லரில் தெரிகிறது. தகவல் தொழில்நுட்பங்களை எப்படி குற்றவாளிகள் கையாள்கிறார்கள் என்பதை மையக்கருவாக வைத்து முகம் படத்தை திரில்லர் ஆக்சன் கதையாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீராம் டி பிரசாத். இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்