பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைந்த விஜய் சேதுபதி படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

வியாழன், 16 நவம்பர் 2023 (12:47 IST)
வரும் பொங்கல் திருநாளில் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், தனுஷ் மற்றும் சுந்தர் சி படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது விஜய் சேதுபதி படமும் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.  

விஜய் சேதுபதி நடித்த ஹிந்தி படமான ’மெர்ரி கிறிஸ்மஸ் என்ற படம் ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது  பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஸ்ரீராம் ராகவன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் இந்த படத்தை டிசம்பர்  மாதம் கிறிஸ்மஸ் விருந்தாக வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி பொங்கலுக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொங்கல் தினத்தில் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான்,  சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4 ஆகிய நான்கு திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது விஜய் சேதுபதி படமும் பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்