பில்கேட்ஸ் கிட்ட தமிழில் பேசினேன்: விஜய்சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ புரமோ!

வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:08 IST)
பில்கேட்ஸ் இடம் தமிழில் பேசியதாக விஜய் சேதுபதி கூறும்  கடைசி விவசாயி படத்தின் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. 
 
விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி விவசாயி திரைப்படம் வரும் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது 
இந்த படத்தின் டிரைலர் டீசர் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில் தற்போது புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது 
 
அதில் பில்கேட்ஸ் இடம் நான் தமிழில் பேசினேன் அவர் என்னிடம் ஆங்கிலத்தில் பேசினார் என்று கூறும் ஒரே ஒரு காட்சி மட்டும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
வித்தியாசமான வேடத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள இந்த படம் விவசாயிகளின் அவல நிலையை எடுத்துக் கூறும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
விஜய் சேதுபதி, யோகிபாபு, முனீஸ்வரன், காளிமுத்து உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்