சீதக்காதி படத்தில் வித்தியாசமான ரோலில் விஜய் சேதுபதி!

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (15:58 IST)
பாலாஜி தரணீதரன் இயக்கும் ‘சீதக்காதி’ படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்க முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் மகேந்திரன்.  நயன்தாரா, ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி உள்ளிட்ட சில நடிகைகள் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கின்றனர்.

 
 
''செத்தும் கொடுத்தார் சீதக்காதினு ஒரு பழமொழி இருக்கும். அந்த மோடில் சொல்லும் கதைதான் சீதக்காதி. இது ஒரு பேமலி  டிராமா கதைதான். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இதுவரை அவர் இந்த கேரக்டரில் நடித்ததில்லையாம். விஜய் சேதுபதி  இந்தப் படத்தில் ஒரு நடிகராக நடிக்கிறார். ஆனால், அவர் எந்த நடிகராக நடிக்கிறார் என்பது சஸ்பென்ஸாக வைத்துள்ளனர்.
 
விஜய் சேதுபதி தவிர இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அவர்களின் கேரக்டராகவே வருவார்கள். பார்வதி நாயர்  கதாபாத்திரத்துக்கு முதலில் ஓவியா நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சனையால் அவர் நடிக்கவில்லையாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்