திரையரங்குகள் செயல்பட அனுமதி !

சனி, 31 ஜூலை 2021 (21:45 IST)
நமது அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் மற்றும் மதுபான பார்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் சீனாவில் இருந்து முதன் முதலில் கொரொனா உருவானது. பின்னர் பல்வேறு நாடுகளுக்கு இத்தொற்றுப் பரவிய நிலையில், இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்தது. தற்போது ஓரளவு குறைந்து வரும் நிலையில் சில மாநிலங்களில் மேலும் அதிகரித்து வருகிறது.  வந்த நிலையில்  மூன்று வாரங்களாகக் குறைந்து வருகிறது.

இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில்  தற்போது  ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகள் திறக்க அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் நமது அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரவு நேரக் காட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விதமான பார்களும் 50% இருக்கைகளுடன் செயல்படலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்