விஜய் 69 படத்துக்கு இசையமைப்பாளர் இவரா… வெளியான தகவல்!

vinoth

சனி, 7 செப்டம்பர் 2024 (09:06 IST)
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  உருவான கோட் திரைப்படம் இரு தினங்களுக்கு முன்னர் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.  படம் முதல் நாளில் உலகளவில் 126 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது.

இந்த படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை இயக்க இயக்குனர் ஹெச் வினோத்  ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது குறித்தோ தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட் படத்தில் யுவனின் இசை எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த நிலையில் அடுத்த படத்தில் அனிருத்தையே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்