மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் பிறந்தவர் விஜய் மல்லையா. தொழிலதிபரின் மகனாகப் பிறந்த இவரும் தொழிலதிபராகவும் அரசியல்வாதியாகவும் இருந்தார். பிரபல பீர் நிறுவனமான ‘கிங் பிஷர்’, இவருக்குச் சொந்தமானது தான்.
அதுமட்டுமல்ல, ‘கிங் பிஷர்’ காலண்டர், உலக அளவில் புகழ்பெற்றது. பண மோசடி வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்தவர் விஜய் மல்லையா. அதன்பிறகு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டார். அவர் இப்போது எங்கிருக்கிறார் என்றே கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பாலிவுட்டில் படமாக்க இருக்கின்றனர். விஜய் மல்லையா வேடத்தில் கோவிந்தா நடிக்கிறார். பாலஜ் நிஹலானி இந்தப் படத்தை இயக்குவதோடு, தயாரிக்கவும் செய்கிறார். விஜய் மல்லையா பற்றிய பல ரகசியங்கள் இந்தப் படத்தின் மூலம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.