ஏப்ரல் 14ல் அம்பேத்கர் சிலைக்கு மாலை.. விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவா?

புதன், 12 ஏப்ரல் 2023 (16:02 IST)
ஏப்ரல் 14ஆம் தேதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும் என விஜய் மக்கள் மன்றத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த்உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் ஒரு அமைப்பாக தற்போது செயல்பட்டு வருகிறது என்பதும் இது அரசியல் கட்சியாக விரைவில் மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தலைமையில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மே மாதம் வரை மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
முதல் கட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அன்றைய தினம் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் அந்தந்த பகுதியில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த புஸ்ஸி ஆனந்த்அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்