காதல் விவகாரம்? பிஎச் டி மாணவி மீது பெட்ரோல் ஊற்றிய சக மாணவன்

செவ்வாய், 22 நவம்பர் 2022 (22:25 IST)
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் ஒரு பிஎச் மாணவி மீது  சக மாணவன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஇயுள்ளது.

மகாராஷ்டிர மா நிலம்  அவுரங்காபாத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் ஒரு பிஎச்டி படிப்பு படிக்கும் மாணவி ஒருவர், கல்லூரி ஆய்வகத்தில் இன்ற் ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அங்கு வந்த அவருடன் படிக்கும் சக மாணவன் ஒருவர் அவர் மீது பெட்ரோல் ஊற்றி பின் தன் உடலிலும் பெற்றோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டான்.

இருவர் உடலிலும் தீப் பற்றியதை அடுத்து, அருகில் உள்ள மாணவர்கள் இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

 அந்த மாணவிக்கு 30 % உடலில் படுகாயம் உள்ளதாகவும், மாணவனுக்கு 90%  உடலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் விசாரித்த நிலையில், பெட்ரோல் ஊற்றிய மாணவன் பெயர் கஜனன்குஷால்ராவ் முண்டே என்றும் இருவருக்கிடையே காதல் விவகாரம் காரணமாக் இந்தச் சம்பவம் நடத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்