விஜய்க்கு’ லியோ’ படம் ரொம்ப பிடித்துள்ளது- மிஷ்கின்
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (20:32 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், மாஸ்டர் படத்திற்குப் பின் லோகேஷ் இயக்கத்தில் நடித்துள்ள படம் லியோ.
லலித்குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து, அர்ஜுன், சஞ்சய் தத், திரஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.
இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ள நிலையில், லியோ பட இசைவெளியீட்டு விழா செப்டம்பர் 30 ஆம் தேதியில் நடத்த, நேரு உள்விளையாட்டு அரங்கம் உட்பட இடங்களை பார்த்து வருகின்றனர்.
இதற்கிடையே லியோ பட இரண்டாவது சிங்கிலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இப்பாடலை அனிருத் பாடியுள்ளதாகவும், இதில், காஷ்மீரில் ஷூட்டிங் செய்த காட்சிகளும் உள்ளது.
இந்த நிலையில், லியோ படத்தில் நடித்துள்ள இயக்குனர் மிஷ்கின் இப்படம் பற்றி கூறியதாவது: நடிகர் விஜய் தம்பி லியோ பார்த்துள்ளார். படம் அவருக்கு ரொம்ப பிடித்துள்ளது. வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி லியோ பட இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளது என்று தெரிவித்தார்..
மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு'' என்னை மாட்ட வைக்கதீங்க..'' என்று மிஷ்கின் கூறினார். உடனிருந்த செய்தியாளர்கள் சிரித்தனர்.