அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய் மக்கள் இயக்கத்தினர்

வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (15:51 IST)
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அண்ணாத்துரையின் 115 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

எனவே,  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு திராவிட கட்சிகள் பேரறிஞர் அண்ணாத்துரையின் சிலைக்கு இன்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இன்று பேரறிஞர் அண்ணாத்துரை  படத்திற்கு மலர்மாலை அணிவித்து,  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து, புஸ்ஸி ஆனந்த் தன் சமூக வலைதள பக்கத்தில்,

தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க, பேரறிஞர்அண்ணா அவர்களின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு! தளபதி விஜய் மக்கள் இயக்கம்   சார்பாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.!

இந்நிகழ்ச்சியில் தென்சென்னை வடக்கு மாவட்ட தலைவர், தொகுதி தலைவர்கள், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,#பேரறிஞர்அண்ணா அவர்களின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு!

• தளபதி விஜய் மக்கள் இயக்கம் @TVMIoffl சார்பாக,#சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.!… pic.twitter.com/z0iRqC6fGl

— Bussy Anand (@BussyAnand) September 15, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்