வெளிநாட்டில் விஜய்யின் லியோ ஆடியோ லான்ச்?- பின்னணி என்ன?

வியாழன், 8 ஜூன் 2023 (13:02 IST)
விஜய் நடித்து வரும் படங்களின் மார்க்கெட் அதிகமாகிக் கொண்டே வருகிறது. உள்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் தனக்கென ஒரு மார்க்கெட்டை விஜய் உருவாக்கியுள்ளார். அவரின் சமீபத்தைய படங்களின் வசூலே அதற்கு சாட்சி.

இந்நிலையில் லியோ படத்தில் விஜய்யோடு லோகேஷும் இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை சுமார் 60 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் படத்துக்கு வெளிநாட்டில் ஹைப் ஏற்றவேண்டும் என்பதற்காக வெளிநாட்டில் ஆடியோ ரிலீஸ் நடத்த திட்டமிடுவதாக சொல்லப்படுகிறத்.

தற்போது லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. மாஸ்டர் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மேல் எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்