விஜய்யின் ‘கோட்’ படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்வது யார்? அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பு..!

Mahendran

வெள்ளி, 5 ஜூலை 2024 (14:18 IST)
விஜய் நடித்த கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் நிறுவனத்தை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 
 
விஜய் 3 வேடங்களில் நடித்த மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 
 
இந்த நிலையில் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் விளம்பர பணிகள் மற்றும் பிசினஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
அந்த வகையில் கோட் திரைப்படத்தை தமிழகத்தில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாக  தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த நிறுவனம்தான் அஜித் நடித்த துணிவு உள்பட சில படங்களை தமிழகத்தில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.
 
 

Happy to announce #RomeoPictures has bagged the distribution rights of #TheGreatestOfAllTime for Karnataka!@actorvijay Sir #TheGreatestOfAllTime
A @vp_offl Hero#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh#GOAT @mynameisraahul @thisisysr @actorprashanth @PDdancingpic.twitter.com/h5jJ1BQu4U

— Archana Kalpathi (@archanakalpathi) July 5, 2024
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்