’பீஸ்ட்’ 38 நொடிகள் வீடியோ லீக்: அதிர்ச்சியில் படக்குழு

புதன், 20 அக்டோபர் 2021 (20:02 IST)
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற காட்சியின் வீடியோ ஒன்று திடீரென இணையதளங்களில் கசிந்துள்ளது படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் 38 வினாடிகள் காட்சி ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தளபதி விஜயின் சட்டையில் ரத்தக்கறை உள்ள இந்த காட்சியை விஜய் ரசிகர்கள் உள்பட ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர். இதனால் ’பீஸ்ட்’ படக்குழுவினர் குறிப்பாக இயக்குனர் நெல்சன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார் 
 
இதனை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வீடியோ எப்படி இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்தவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்