தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படங்களில் நடித்து வரும் விஜய் தேவாரகொண்டா தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வளரும் நட்சத்திரமாக அறியப்படுபவர். நாட்டில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அவர் மக்களுக்கு ஒரு வேண்டுகோளை தனது சமூகவலைதளப் பக்கத்தில் விடுத்துள்ளார்.
அதில் ‘என் பிரியத்துக்குரியவர்களே… அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். துணிகளால் செய்த மாஸ்க்குகளே கூட இந்த வைரஸ் தொற்று பரவுவதில் உதவும் என நினைக்கிறேன். அதனால் மருத்துவ மாஸ்க்குகளை மருத்துவர்களுக்காக விட்டுவிடுங்கள். வெறும் கர்ச்சீஃப், துணி அல்லது துப்பட்டாவால் செய்த மாஸ்க்குகளைப் பயன்படுத்துங்கள். ’ எனத் தெரிவித்துள்ளார்.