கூலி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்ற ரசிகர்களின் குற்றச்சாட்டு குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், உபேந்திரா, சௌபின், நாகர்ஜூனா என பலர் நடித்து வெளியான படம் கூலி. ரஜினிகாந்த் படம் என்றாலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்குகிறார் என்றதும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது அது தங்கக்கடத்தல் பற்றிய படம், டைம் ட்ராவல் படம் என பல தியரிகள் வெளியானது.
கடைசியாக படம் வெளியானபோது கலவையான விமர்சனங்களையே பெற்றது. பலரும் படம் தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என கூறினர்.
சமீபத்தில் ஒரு நேர்க்காணில் இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் “ஆடியன்ஸின் எதிர்பார்ப்பை நாம் குறை சொல்ல முடியாது. கூலியை பொறுத்தவரை இது டைம் ட்ராவல் கதை, எல்சியு கதை என எதையும் நான் சொல்லவில்லை. ட்ரெய்லரை கூட முதலிலேயே வெளியிடவில்லை. என்னால் ஒருபோதும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் விருப்பத்திற்காக கதை எழுத முடியாது. நான் ஒரு கதை எழுதுவேன். அது ரசிகர்களுக்கு பூர்த்தி செய்தால் நன்றாக இருக்கிறேன். அது நடக்கவில்லை என்றால் தொடர்ந்து முயற்சிப்பேன்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K