சாந்தனுவிற்கு வாழ்த்து கூறிய விஜய் மகள் ? என்னது இவங்க ட்விட்டர்ல இருக்காங்களா?

திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (07:57 IST)
திரையுலகில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக மக்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகராக தமிழ் சினிமாவின் தளபதியாய் உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். இவர் தனது 27 ஆண்டு சினிமா பயணத்தில் 64 படங்களில் பல வித்யாசமான கதாபாத்திரங்களில்  நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

இன்று இவரை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் கசிந்தால் கூட அன்றைக்கு அது செய்தியாக பேசப்படும் அளவிற்கு அவர் உச்ச நடிகராக விளங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது திவ்யா ஷாஷா விஜய் என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சாந்தனுவிற்கு வாழ்த்து கூறியுள்ளார். அவருக்கு சாந்தனுவும் நன்றி தெரிவித்தார்.

இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் தளபதியின் மகள் ட்விட்டரில் இருக்கிறாரா..? என்று பலரும் அந்த ட்விட்டர் கணக்கிற்கு விசிட் அடித்து வருகின்றனர். ஆனால், உண்மையில் இது விஜய் மகளின் கணக்கு இல்லை fake அக்கவுண்ட். இதை சுதாரித்து கொண்ட தளபதி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துவிட்டனர்.
 

Many more happy returns of the day uncle

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்