சந்தோஷ் சிவன் திரைப்படத்தில் இருந்து வெளியேறிய விஜய் ஆண்டனி? இதுதான் காரணமா

செவ்வாய், 17 மே 2022 (15:28 IST)
இயக்குனர் மற்றும் சந்தோஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம்வந்து கொண்டிருந்த விஜய் ஆண்டனி, ஒரு கட்டத்தில் நடிப்பின் மேல் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக நடிகரானார். அவர் நடிப்பில் வெளியான நான், சலீம் மற்றும் பிச்சைக்காரன் ஆகிய படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கென்று ஒரு மார்க்கெட் உருவானது. தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டிய விஜய் ஆண்டனி ஒரு கட்டத்தில் இசையமைப்பதையே நிறுத்தினார்.

இப்போது பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் இந்தி மற்றும் தமிழில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சந்தொஷ் சிவன் இயக்க ஒப்பந்தமானார்.

ஆனால் இப்போது அந்த படத்தில் இருந்து விஜய் ஆண்டனி வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது. திரைக்கதையில் தன்னைவிட தயாரிப்பாளர் மகன் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு இருப்பதால் இந்த படத்தில் இருந்து அவர் வெளியேறி இருப்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்