'பிச்சைக்காரன் 2’ படத்தின் முதல் 4 நிமிட காட்சிகள் ரிலீஸ்: வைரல் வீடியோ..!

வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (18:57 IST)
விஜய் ஆண்டனி நடித்துவரும் பிச்சைக்கார 2 படத்தின் படப்பிடிப்பு முடிவடையுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நான்கு நிமிட காட்சியை விஜய் ஆண்டனி சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
 
விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்துவரும் இந்த படத்தை அவரே இயக்கி வருகிறார் என்பதும் அது மட்டும் இன்றி அவரே இசையமைத்து படத்தொகுப்பு பணியையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் முதல் நான்கு நிமிட காட்சியை டக்குழுவினர் வெளியிட்டுள்ளன. மூளை மாற்று அறுவை சிகிச்சை குறித்த கதை அம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
 
விஜய் ஆண்டனி, யோகிபாபு, காவ்யா தபார், ஜான் விஜய், ஒய்ஜி மகேந்திரா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்