விஜய் ஆண்டனி மகள் திடீர் தற்கொலை.. என்ன காரணம்? அதிர்ச்சி தகவல்..!

செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (07:06 IST)
நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் இயக்குனர் என பல அவதாரங்களில் தமிழ் சினிமாவில் இருந்து வரும் விஜய் ஆண்டனியின் மகள் மீரா, திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை அவர் தூக்கில் தொங்கியதை பார்த்த  அவரது வீட்டினர் உடனடியாக அவரை சென்னை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்  
 
கடந்த சில நாட்களாக விஜய் ஆண்டனியின் மகள் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இதனை அடுத்து திடீரென நேற்று இரவு அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்