இந்த நிலையில் ஏற்கனவே கோட் படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆனது என்பதும் விஜய் பாடிய இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்தது. இந்த நிலையில் நாளை விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாவது பாடல் வெளியாக இருப்பதாக இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த இரண்டாவது பாடலையும் விஜய் தான் பாடியுள்ளார் என்று அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.