சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய்யின் கோட் பட நடிகை!

vinoth

வெள்ளி, 21 ஜூன் 2024 (17:10 IST)
சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 1 மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு வெற்றியை ஈட்டித்தந்த படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் இப்போது அந்த படத்தின் மூன்றாவது பாகத்தை டிடி ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் எடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்தனர்.

இந்நிலையில் இந்த படம் திரையரங்கின் மூலமாக மொத்தம் 30 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து கேரியர் பெஸ்ட் வசூலை கொடுத்தது. இதையடுத்து ஜி5 ஓடிடி தளத்தில் அதிலும் சாதனைப் படைத்தது.

இதையடுத்து இதன் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க உள்ளது. இந்த படத்தை ஆர்யா தயாரிக்க பிரேம் ஆனந்த் இயக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மீனாட்சி சௌத்ரி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் விஜய்யின் கோட் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்