பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்..! கள்ளக்குறிச்சிக்கு செல்லுங்கள்..!! நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு

Senthil Velan

வெள்ளி, 21 ஜூன் 2024 (12:12 IST)
தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
 
கள்ளக்குறிச்சியில் விஷசாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தனது கட்சியின் மாவட்ட செயலாளருக்கு, விஜய் அறிவுறுத்தியுள்ளார். 
 
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்யின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
அதில், தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து என அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: சபாநாயகரின் அழைப்பை புறக்கணித்த அதிமுக..! சற்று நேரத்தில் ஆளுநரை சந்திக்க திட்டம்..!!
 
எனவே தலைவர் அவர்களின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்