ஐதராபாத்தில் தளபதி 68 பட அடுத்த கட்ட ஷூட்டிங்!

செவ்வாய், 14 நவம்பர் 2023 (07:51 IST)
கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆன லியோ திரைப்படம் இதுவரை 541 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று முன் தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள்.

இந்நிலையில் லியோ சக்ஸஸ் மீட் முடிந்த அடுத்த நாளே தன்னுடைய அடுத்த படத்துக்கான ஷூட்டிங்குக்காக விஜய் தாய்லாந்து சென்றார். அங்கு விஜய் நடிக்கும் முக்கியமான கார் சேஸிங் ஆக்‌ஷன் காட்சியை படக்குழு படமாக்கினார்கள்.

இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கும் ஒரு முக்கியமான ஆக்‌ஷன் காட்சியை படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்