விஜய் 65 படத்தை இயக்கப்போகும் இயக்குனர் இவர்தான்!

புதன், 4 நவம்பர் 2020 (09:48 IST)
விஜய் 65 படத்தை இயக்க போகும் இயக்குனர் யார் என்பது குறித்து ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் இப்போது அந்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த பட்டியலில் பல இயக்குனர்கள் பெயர் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த இயக்குனர் யார் என்பது இப்போது வெளியாகியுள்ளது.

நயன்தாராவை வைத்து தனது முதல் படத்தை இயக்கி இப்போது சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கி வரும் இயக்குனர் சொன்ன கதை விஜய்க்கு பிடித்துள்ளதாகவும், இதனால் அவர்தான் அந்த படத்தின் இயக்குனராக இருக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த இயக்குனரை அனிருத்தான் விஜய்க்கு பரிந்துரை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்