ஆனால் தற்போது விஜய் தனது 63வது படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதே, 64வது, 65வது, 66வது என மூன்று பட இயக்குனர்களையும் அவர் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் விஜய்யின் 65வது படம் அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு உதவிடும் வகையில் அவருடைய தயாரிப்பில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாகவும் இந்த படம் செண்டிமெண்ட் கலந்த குடும்ப படம் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது
மேலும் விஜய்யின் 66வது படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கவுள்ளார். இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றும், முழுக்க முழுக்க இந்த படம் காதல், காமெடி இல்லாத ஒரு ராவ்வான படம் என்றும் கூறப்படுகிறது