இன்னும் ஆயிரம் வருஷம் ஆனாலும் தலைவர் தலைவர் தான்: விக்னேஷ்சிவன்

வியாழன், 29 நவம்பர் 2018 (21:53 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் இன்று வெளியாகி எதிர்பார்த்ததை விட சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக கோலிவுட் திரையுலகினர் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். முதல் நாள் முதல் காட்சி பார்த்த திரையுலக பிரபலங்கள் டுவிட்டரிலும், பேட்டியில் இந்த படம் குறித்து பெருமையாக பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் காட்சி பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியதாவது: 'இது ஒரு அதிசயமான படம். தமிழில் இப்படி ஒரு படம் உருவாக்கியுள்ளது எங்கள் அனைவருக்குமே பெருமை. இயக்குனர் ஷங்கரின் கற்பனை அபரீதமானது. 25 வருடங்களாக அவர் ஒவ்வொரு படத்திலும் வேற வேற மாதிரி, ஒவ்வொரு காட்சியும் ஹாலிவுட் படங்கள் உள்பட எந்த படத்திலும் வராத காட்சிகளை அமைப்பார்.

தலைவர் தலைவர் தான். இது பத்து வருஷம் ஆனாலும் நூறு வருஷம் ஆனாலும் ஆயிரம் வருஷம் ஆனாலும் தலைவர் தலைவர் தான். அவர் ஸ்க்ரீனில் வந்தாலும் சும்மா தியேட்டரே அதிருது. இந்த படத்தை எல்லாரும் ஒரு 50 தடவையாவது பார்க்கணும், அதான் என்னோட ஆசை. இவ்வாறு விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்