தலைவர மட்டுமே கொண்டாடாதீங்க தல அப்டேட்ட பாருங்க...
வியாழன், 29 நவம்பர் 2018 (16:48 IST)
இன்று 2.0 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அனைவரும் தலைவர் ரஜினிகாந்தை தலை தூக்கிவைத்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கொண்டாட்டத்திற்கு மத்தியில் தல படமான விஸ்வாசம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதனை விஸ்வாசம் படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா வெளியிட்டுள்ளார்.
விஸ்வாசம் படம் ஜாலியான எமோஷ்னலான திருவிழா படமாக இருக்கும். வெளியே வீரமாகவும், உள்ளுக்குள் வெள்ளந்தியாகவும் வாழுகிற மனுசங்களோட உணர்வு பூர்வமான சம்பவங்கள்தான் இந்த விஸ்வாசம்.
படத்தில் அஜித்திற்கு இரண்டு வேடம் எல்லாம் இல்லை, முதல் பாதியில் கிராமத்திலும் இரண்டாம் பாதி நகரத்திலும் கதை நகரும். நயன்தாராவிற்கு வெயிட்டான வேடம்தான். நிரஞ்ஜனா என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.
படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளது, அதில் முக்கியமாக 2 பவர் புல்லான பாடல்கள் உள்ளது என்ற விஸ்வாசம் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளார்.