இவர் ஏற்கனவே 'அகிலா முதலாம் வகுப்பு', 'என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா', 'ஒற்றாடல்', 'ஆந்தை' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
படத்தின் தொடக்கத்திலேயே நகைக் கடை ஒன்றில் பெரிய திருட்டு சம்பவம் நடக்கிறது. அவர்களை காவல்துறை கண்டுப்பிடித்து, கைது செய்யும் சமயத்தில், கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் வருகிறது.
காவல்துறை விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வருகிறது. நகைக்கடை திருட்டுக்கும், மாணவி தற்கொலைக்கும் இடையே உள்ள சம்பந்தம், படம் முடியும் வரை கண்டுபிடிக்க முடியாத வகையில், திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாக இயக்கி உள்ளார் தளபதி.
நாயகியாக சலோனி சயூரி அறிமுகமாகிறார். சிங்கம் புலி, வேளாங்கண்ணி, பிரபு சாஸ்திரி, தமிழ்ச்செல்வி, மணிமாறன், சாய் ரோகிணி, மில்டன், மேடிசன், அருண் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு பி.வி.பாலமுருகன், இசை விஜய் பிரபு, படத்தொகுப்பு விக்னேஷ் வி.எஸ், பாடல்கள் வித்தாகர், சண்டைப் பயிற்சி ராக்கி ராஜேஷ், நடனம் பவர் சிவா, மக்கள் தொடர்பை கோவிந்தராஜ் கவனிக்கிறார். ஆர்.வேல் முருகன், எஸ்.அருண் விக்னேஷ் இருவரும் படத்தை தயாரித்து உள்ளனர். இணைத் தயாரிப்பு வி.பி.சரவணகுமார்.