வடசென்னை குறித்த ரகசியத்தை சொன்ன வெற்றிமாறான்

புதன், 7 ஜூன் 2017 (19:54 IST)
வடசென்னை படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் அதுகுறித்த இருந்த ரசிகத்திற்கு அப்படத்தின் இயக்குநர் வெற்றி மாறன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


 

 
பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களுக்கு பிறகு மீண்டும் வெற்றி மாறன், தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் படம் வடசென்னை. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக முதலில் செய்தி வந்தது. பின் அவர் படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது. பின்னர் மீண்டும் அப்படியெல்லாம் இல்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் விஜய் சேதுபதிக்கு பதில் அமீர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதில் எது உண்மை என்று தெரியாமல் வெகுநாட்களாக இது ரகசியமாகவே இருந்து வந்தது.
 
இந்நிலையில் இயக்குநர் வெற்றி மாறன் இந்த ரகசியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து அவர், வடசென்னை படத்தில் அமீர் நடிப்பது உண்மைதான். ஆனால் யாருக்கும் பதிலாக யாரும் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதிலிருந்து விஜய் சேதுபதிக்கு பதில் அமீர் நடிக்கவில்லை என்பது தெரியவருகிறது.
 
ஆனால் விஜய் சேதுபதி வடசென்னை படத்தில் நடிக்கிறாரா? இல்லையா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்