4 கோடியில் ஆரம்பித்தோம்… 65 கோடி ரூபாய் ஆயிடுச்சு… விடுதலை பட்ஜெட் குறித்து இயக்குனர் வெற்றிமாறன்!

செவ்வாய், 12 டிசம்பர் 2023 (07:24 IST)
இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கி பின்னர் திருவள்ளூரில் நடைபெற்றது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார். இந்நிலையில் இப்போது படத்தில் மேலும் சில கதாபாத்திரங்களை சேர்க்க முடிவு செய்துள்ளாராம். அதனால் ஷூட்டிங் இன்னும் 30 நாட்கள் அதிகமாக நடத்த வேண்டியுள்ளதாம்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் பேசியுள்ளார். அதில் “இந்த படத்தை 4 கோடியில் ஆரம்பித்தோம். ஆனால் 10 சதவீதம் ஷூட்டிங் முடிவதற்குள் 70 சதவீதம் பட்ஜெட் காலியாகிவிட்டது. மொத்த படத்தையும் முடிப்பதற்கு 65 கோடி ரூபாய் ஆகிவிட்டது. இதனால் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்