சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி, தயாரித்த பழம்பெரும் இயக்குனர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் இன்று காலமானார். அவருக்கு வயது 88
எஸ்.எஸ்.ஆர் நடித்த 'முதலாளி' படத்தின் மூலம் இயக்குனரான முக்தா சீனிவாசன், அதன் பின்னர் இதயத்தில் நீ, பூஜைக்கு வந்த மலர், தேன்மழை, பொம்மலாட்டம், நிறைகுடம், அருணோதயம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஜெயலலிதாவின் 100வது படமான 'சூரியகாந்தி' படத்தை இயக்கியவரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.