தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் கடந்த 30 வருடங்களாக நடித்து வருபவர் வேணு அரவிந்த். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் குணமாகிய பின்னர் மூளையில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அறுவை சிகிச்சை செய்து மூளைக்கட்டி அகற்றப்பட்ட பின்னர் அவர் கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில் இப்போது வரை அவர் கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக சொல்லப்பட்டது.