தன்னைக் கலாய்த்த ட்ரோலுக்கு ரிப்ளை செய்த வெங்கட்பிரபு!

வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:33 IST)
வெங்கட்பிரபு தன்னைக் கலாய்த்த நபரின் டிவிட்டில் கமெண்ட் செய்துள்ளார்.

சமீபத்தில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுகங்கள் வெளியாகின. அதில் பலரும் கதாபாத்திர தேர்வுகள் குறித்து தங்கள் விமர்சனங்களை வைக்க, சிலர் அதை ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தனர். இது சம்மந்தமாக மீம்ஸ்களும் பெருகி வீதிக்கு வந்தன.

இந்நிலையில் இது சம்மந்தமான மீம்ஸ் ஒன்றில் டிவிட்டர் வாசி ஒருவர் இதுவே வெங்கட்பிரபு இயக்கத்தில் பொன்னியின் செல்வன் உருவாகி இருந்தால் பிரேம்ஜிக்கு என்ன வேடம் கொடுக்கப்பட்டு இருக்கும் என்றும் அதற்கு மணிரத்னத்தின் தேர்வே பரவாயில்லை என்று பகிர்ந்திருந்தார்.

அந்த மீமுக்கு பதிலளித்த வெங்கட்பிரபு ‘அடப்பாவிகளா’ என அதை ஜாலியாக எடுத்துக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்