மாநாடு வெற்றி… பார்ட்டி பட ரிலிஸுக்கு அதிக வாய்ப்பு!

செவ்வாய், 30 நவம்பர் 2021 (10:51 IST)
மாநாடு படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் பார்ட்டி படம் ரிலிஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ரிலீஸ் ஆகாமல் உள்ள திரைப்படம் பார்ட்டி. வெங்கட்பிரபுவின் குழுவைச் சேர்ந்த அனைவரும் நடித்திருக்கும் அந்த திரைப்படம் முழுக்க முழுக்க பீஜிங் தீவில் படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பல காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் இயக்கியுள்ள மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் பார்ட்டி மற்றும் அவர் இயக்கியுள்ள மற்றொரு திரைப்படமான மன்மத லீலை ஆகிய படங்களுக்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த இரு படங்களும் விரைவில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொலல்ப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்