மாநாடு வெற்றி…. மஹா படத்தை தள்ளிவிட நினைக்கும் படக்குழு!

செவ்வாய், 30 நவம்பர் 2021 (10:08 IST)
மாநாடு படத்தின் இமாலய வெற்றி இப்போது சிம்புவின் மீதான கவனத்தை அதிகப்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான மஹாவில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.  இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருந்த நிலையில் இப்போது சிம்புவின் மாநாடு ரிலிஸ் ஆகி பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் மஹா படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்து விட வேண்டும் படக்குழு முடிவு செய்துள்ளது.

அதனால் இப்போது மஹா படத்தை ப்ரமோட் செய்யும் பணிகளில் படக்குழு இறங்கியுள்ளது. மேலும் அந்த படத்தை பெரிய தொகைக்கு வாங்கவும் விநியோகஸ்தர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்