மறக்குமா நெஞ்சம்.. வெந்து தணிந்தது காடு டீசர் வீடியோ! – ஆச்சர்யத்தில் சிம்பு ரசிகர்கள்!

வெள்ளி, 10 டிசம்பர் 2021 (14:21 IST)
வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ள நிலையில் சிம்பு ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மாநாடு வெற்றியை தொடர்ந்து சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து சிம்பு – கௌதம் மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணில் வரும் மூன்றாவது படம் இது.

இந்த படத்தின் போஸ்டர் முன்னதாக வெளியாகி பெரும் வைரலானது. அதில் சிம்பு உடலை மிகவும் குறைந்து மெலிந்தவராக காணப்பட்டது பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ள மறக்குமா நெஞ்சம் என்ற பாடலோடு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இதுவரை காணாத ஏழை இளைஞன் தோற்றத்தில் சிம்புவின் காட்சிகள் சிம்பு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்