விக்ரம் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்திற்கான சென்சார் தகவல்கள் மற்றும் திரையிடப்படும் நேரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ரசிகர்களுக்காக முன்பதிவு முறையாக தொடங்கியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து, தற்போது ரிலீசுக்கு முழுமையாக தயாராகியுள்ளது. சென்சார் குழுவின் பரிசீலனைக்கு பிறகு, படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் ரன்னிங் நேரம் 2 மணி 42 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ள இந்தப் படத்தில், எஸ்ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார். அவர்களுடன் சூரஜ், சித்திக் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கான ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் மேற்கொண்டுள்ளார், மேலும் பிரசன்னா படத்தொகுப்பை கவனித்துள்ளார்.
தற்போது ரிலீஸ் ஆவது வீர தீர சூரன் படத்தின் 2ஆம் பாகம் என்றும், முதலாவது பாகத்திற்கான படப்பிடிப்பு இந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு தொடங்கும் என கூறப்படுகின்றது. ஆக்சன், திரில்லர் என இரசிகர்களை ஈர்க்கும் வகையில் உருவாகியுள்ள வீர தீர சூரன் படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.