கர்நாடகாவில் இருந்து உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய காவிரித் தண்ணீரை வழங்கவில்லை என தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சினிமாத்துறையினர் கூட சமீபத்தில் போராட்டம் நடத்தினர். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்திருக்கும் கமல், ரஜினி கூட காவிரித் தண்ணீருக்காகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ‘ரஜினி, கமல் படங்களைக் கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம்’ என கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். தமிழக – கன்னட எல்லையான அத்திப்பள்ளியில் நடைபெற்ற போராட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார் அவர்.