திரைக்கதை வகுப்பில் வைக்க வேண்டிய படம்… மாநாடு படத்தை புகழ்ந்த இயக்குனர்!

சனி, 15 ஜனவரி 2022 (11:49 IST)
மாநாடு திரைப்படம் வெளியாகி 50 நாட்களுக்குப் பிறகும் பார்வையாளர்களைக் கவர்ந்து பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வசந்தபாலன நேற்று தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் மாநாடு படத்தை பற்றிய தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்திருந்தார். அதில் ‘மிக மிக தாமதமாக இன்று காலை தான் மாநாடு திரைப்படம் பார்த்தேன். திரைக்கதையாக மிக மிக கூர்மையாக அமைக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதைக்கான மாஸ்டர் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டிய திரைக்கதை.விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பிறகு தமிழில் வந்த முக்கிய திரைக்கதை ஆளுமையுள்ள திரைப்படம். சுவாரஸ்யம் குறையாதவாறும் டைம் லூப் என்கிற யுக்தி கடைசி ரசிகனுக்கும் மிக எளிமையாக புரியும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தான் சிறப்பு.

மனமார்ந்த வாழ்த்துகள் Venkat Prabhu. இந்த குண்டுவெடிப்பின் மூலம் ஒரு சமூகத்தின் பெயர் பாழ்பட்டுவிடக்கூடாது ஏற்கனவே ஒரு பிரதமர் மரணத்தில் ஒரு இனத்தின் பெயர் பாதிக்கப்பட்டது என்கிற இடத்தில் பேசுகிற அரசியல் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது. சிம்புவும் எஸ் ஜே சூர்யா அவர்களும் மிக சரியான நடிப்பால் படத்தை தங்கள் தோள்களில் தாங்கியிருக்கிறார்கள். எடிட்டிங்கில் பிரவீன் அதி சிரத்தையாக ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளார்.மாநாடு குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்