வரலட்சுமியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடக்கம்

திங்கள், 7 ஜனவரி 2019 (21:05 IST)
கடந்த ஆண்டு அதிக திரைப்படங்களில் நடித்த நடிகை வரலட்சுமிதான் .அவரது நடிப்பில் 'மிஸ்டர் சந்திரமெளலி, 'சண்டக்கோழி 2', 'சர்கார்', 'மாரி 2' ஆகிய படங்கள் வெளியாகியது. மேலும் அவர் வெல்வெட் நகரம், கன்னிராசி, நீயா 2, அம்மாயி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் வரலட்சுமி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தின் டைட்டில் 'டானி' என்று வைக்கப்பட்டுள்ளது 

வரலட்சுமி, வேல ராமமூர்த்தி, யோகிபாபு உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை சந்தான மூர்த்தி இயக்கவுள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையில், ஆனந்தகுமார் ஒளிப்பதிவில் ஃபாசில் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தை புளுபெர்ரி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்