பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது நடவடிக்கை காரணமாக ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. வெளிப்படையான தன்மை, எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பது, காதலாகி உருகுவது, முகத்திற்கு நேராக பேசுவது என பலரின் மனதில் இடம் பிடித்தார் ஓவியா.
அதனாலேயே, அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதேபோல், அந்த நிகழ்ச்சியில் உள்ள ஜூலி, காயத்ரி ஆகியோர் ஓவியாவிற்கு எதிராக செயல்பட்ட போதும், அவரை அழ வைத்த போதும், ஓவியா ஆர்மி, ஓவியா பேரவை எனத் தொடங்கி அவருக்கு ஆதரவாகவும், காயத்ரி, ஜூலி ஆகியோருக்கு எதிராகவும் சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துகள் மற்றும் மீம்ஸ்களை அள்ளித் தெளித்தனர்.
அதன் பின் தன்னுடைய காதலை ஆரவ் ஏற்காததால், மனமுடைந்த ஓவியா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அவர் வெளியேறிவிட்டதால், பலரும் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதையே தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கையை சேர்ந்த சில இசைக் கலைஞர்கள் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். பிரேம்ராஜ் என்பவர் அதற்கு இசையமைத்துள்ளார். இந்த பாடலை யஜீவன், பிரசாதன் மற்றும் பிரேம்ராஜ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.