2015ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க எலெக்ஷனில், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் வம்பு நடிகர். சரத்குமார், ராதாரவி அணி சார்பில் போட்டியிட்ட அவர், தோல்வி அடைந்தார். எதிர் அணியில் போட்டியிட்ட விஷால், கார்த்தி ஆகியோர் வெற்றி பெற்று பதவிக்கு வந்தனர்.
நேற்று, நடிகர் சங்கத்தின் 64வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதுதான் விஷால் அணியின் கடைசி பொதுக்குழு கூட்டம். ‘அடுத்த எலெக்ஷனிலும் நாங்கள் ஜெயிப்போம்’ என விஷால் அணியினர் நேற்று கூட்டத்தில் கூறினர். அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம்தான் எலெக்ஷன் வருகிறது. இருந்தாலும், கடந்த முறை விஷால் அணியை எதிர்த்துப் போட்டியிட்ட வம்பு நடிகர், இந்த முறையும் எதிர்த்துப் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.