’வலிமை’ ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ விரைவில்; ரசிகர்கள் குஷி
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (08:03 IST)
அஜித் நடித்த வலிமை திரைப்படம் அடுத்த மாதம் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வலிமை படத்தின் ஸ்டண்ட் மேக்கிங் வீடியோவை வெளியிட படக்குழுவினர் தயாராகி விட்டதாகவும் இந்த ஸ்டாண்ட் மேக்கிங் வீடியோ வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது
ஏற்கனவே வலிமை படத்தின் டீஸர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் அல்லது புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
மேலும் வலிமை திரைப்படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான வியாபாரம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது